/ கட்டுரைகள் / பெளத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்
பெளத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்
அயோத்திதாசர் துவங்கி ஜப்பானிய அறிஞர் ஒகாகுரா ககுசோ வரை பவுத்த சமய பிரமுகர்கள் பணியை விளக்கும் நுால். அயோத்திதாசர் ஏன் பெளத்தம் ஏற்றார் என்ற கட்டுரை சிந்தனையைத் துாண்டுகிறது. சிந்தனைச்சிற்பி சிங்காரவேலனார், ‘தமிழ் மாது’ என்ற பத்திரிகை துவங்கிய சொப்பனேஸ்வரி அம்மாள், ‘பூலோக வியாசன்’ பத்திரிகை வழியாக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முத்துவீர நாவலர், பதிப்பு முன்னோடி பி.எம் ராஜரத்தினம் பற்றிய விபரங்கள் உள்ளன.கவிஞர் வீ.வே.முருகேச பாகவதர், புரட்சித் திருமணத்திற்கு வித்திட்ட அன்னபூரணி அம்மாள் மற்றும் மேலைநாட்டுப் பவுத்த பிரமுகர்களையும் குறிப்பிடுகிறது. தகவல் களஞ்சியமாக உள்ள நுால்.– ராம.குருநாதன்