/ கதைகள் / பிரம்மச்சாரி
பிரம்மச்சாரி
காதல், நட்பு, உறவு, விசுவாசம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகளை சித்தரிக்கும் விறுவிறுப்பான நாவல்.சாம்பசிவம் ஒரு ஏமாற்று பேர்வழி. ஊரார் நிலத்தை தீய வழியில் கைப்பற்றுபவர். இவரின் வஞ்சக வலையில் வீழ்ந்தான் மோகன். அவனை காப்பாற்ற நண்பன் வேணு போராடினான். அதில், வேணுவின் காதலி காயமடைந்தாள். இன்னொரு நயவஞ்சகன் சுரேஷ், தன் சகோதரியின் சொத்துக்களை பறிக்க திட்டமிடுகிறான்.சகோதரி மீதே திருட்டுப் பட்டம் கட்டி, அவளுக்கு உதவிய மோகனை வழக்கில் சிக்க வைக்கிறான். வழக்கின் நிலைமை என்னவானது என்ற கேள்விக்கு விடை தேடுவது போல் விறுவிறுப்புடன் புனையப்பட்டுள்ளது. மர்மங்கள் நிறைந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாவல்.– புலவர் சு.மதியழகன்




