/ ஆன்மிகம் / பிரதோச வழிபாடு

₹ 100

பிரதோஷ வழிபாடு குறித்த செய்திகளை விரிவாகக் கூறும் நுால். சூரிய உதயத்தில் சிருஷ்டியும், அஸ்தமனத்தோடு பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடப்பதாக குறிப்பிடுகிறது. சனி தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் சிவன் கோவிலில் வழிபாடு செய்தால், அதற்கான பலன் ஒரு ஆண்டு கிடைக்கும் என உரைக்கிறது. சனி பிரதோஷத்தன்று வழிபட்டால், ஐந்து ஆண்டு தினமும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என உரைக்கிறது. புத்தகம் மூன்று இயல்களாக உள்ளது. முதலில் பிரதோஷ வழிபாடு குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன . இரண்டாவது திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின் குறிப்புகளையும், மூன்றாவது நந்திகேஸ்வரர் பற்றிய செய்திகளையும் கூறுகிறது. சிவனடியார்கள் தவறாது படிக்க வேண்டிய நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை