/ வாழ்க்கை வரலாறு / பேராசிரியர் பி.இரத்தினசபாபதி வாழ்வும் பணியும்
பேராசிரியர் பி.இரத்தினசபாபதி வாழ்வும் பணியும்
கல்வி, மருத்துவம், அரசியல். சுவடியியல் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கி, பேராசிரியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், நுாலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியர் ரத்தினசபாபதியின் வாழ்நாள் சாதனைகளைப் பற்றி, 20க்கும் மேற்பட்ட பல துறையாளர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். பிறந்த ஊரின் தொல்வரலாறு முதல் இளம் பருவக் கல்வி, உயர் கல்வி, ஆசிரியர் பணிக்காலச் செயல்பாடுகள், கல்வி மேம்பாட்டு ஆய்வுகள், இலக்கியச் சிந்தனைகள், மண வாழ்க்கை, தேர்வுச் சீரமைப்புப் பரிந்துரைகள், எழுதிய நுால்கள், அயல்நாட்டுக் கருத்தரங்குப் பங்கேற்புகள், பெற்ற விருதுகள், பணி நிறைவுச் செயல்பாடுகள், இயக்கப் பணிகள் எனப் பல விபரங்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வியாளர்கள் படித்து பயன் பெற வேண்டிய நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு