/ பழமொழிகள் / பழமொழி மருத்துவம்
பழமொழி மருத்துவம்
நல்வாழ்வு தொடர்பாக, சமூகத்தில் புழக்கத்தில் உள்ள பழமொழிகளை சேகரித்து, தொகுத்து ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ள நுால். பழந்தமிழர் வாய்மொழியாக பின்பற்றிய மருத்துவ தகவல்கள், 85 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்கள் அன்றாடம் புழங்கி வரும் பழமொழிகளை வகை பிரித்து, 85 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. அவை, நல்வாழ்வை அடிப்படையாக கொண்டுள்ளன. இவை எப்படி எல்லாம் மக்கள் வழக்கில் நிலைத்துள்ளன என்பதை ஆய்வுபூர்வமாக ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது. நலம் சார்ந்த கருத்துகள் வாய்மொழியாக, ஒவ்வொரு தலைமுறைக்கு கடத்தப்படும் தகவல்கள் ஆய்வுபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. பிற மொழிகளில் பழமொழி சார்ந்த பண்பாடு எப்படி உள்ளது என்பதையும் அலசி அறிய தரும் நுால். – மதி