/ வாழ்க்கை வரலாறு / புலம்பெயர் தமிழர்கள் - வாழ்வு, இருப்பு, படைப்பு
புலம்பெயர் தமிழர்கள் - வாழ்வு, இருப்பு, படைப்பு
புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வு, பணி, படைப்புகளை முன் வைக்கும் நுால். வாழும் சூழல் சார்ந்து மிளிரும் பதிவுகளை படம் பிடிக்கிறது. மலேஷிய நாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள், இன்னல்களுக்கு இடையில் ஈட்டிய பணத்தை ஊருக்கு அனுப்பிய போது ஏமாந்த கதைகள் கவிதையாக உள்ளன. டில்லியில் தமிழ் கற்பிக்கும் கல்லுாரி செயல்பாடுகளை நுட்பமாக ஆய்ந்து தெளிவுபடுத்துகிறது. டில்லி தமிழ்ச் சங்க பணி மற்றும் செயல்பாடு பற்றி உள்ளது. டில்லியில் இலக்கியம் படைத்த சாலை இளந்திரையன், சாலினி, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி ஆற்றிய பணிகள், படைப்புகளையும் எடுத்துரைக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்