/ வாழ்க்கை வரலாறு / புலிப்பால் நாவினால் சுட்ட வடு

₹ 350

ஆதிதிராவிடர் மக்களை கால்நடையாக கருதியது பற்றி பொறுமி எழுதியுள்ள நுால். நசுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனையின் வாயிலாக பிறந்து உள்ளது. ஒன்று வணிகம் செய்து உயர வேண்டும்; இல்லை, படித்து கல்விமான்களாகி உயர வேண்டும்.பாரதியாரின் பாடல்கள், ஈ.வெ.ரா.,வின் பேச்சு, அம்பேத்கரின் சிந்தனைகள் அறிந்து, அதன் வாயிலாக உந்தித்தள்ளப்பட்டு, வைராக்கியமாக படித்து முன்னேறி கல்லுாரி பேராசிரியர் ஆகும் ஒருவரைப் பற்றிய நுால்.வாழ்வில் உயர்நிலை அடையு முன் ஏற்பட்ட தடைகளை எல்லாம் எப்படி தகர்த்து எறிந்தார் என்பதை பதிவு செய்துள்ளது. முன்னேற்றத்துக்கு நம்பிக்கையூட்டும் நுால்.– எஸ்.குரு


சமீபத்திய செய்தி