/ கட்டுரைகள் / புனைகதைப் பனுவல்களில் வாசிப்புத்திறன்
புனைகதைப் பனுவல்களில் வாசிப்புத்திறன்
தமிழ்ச் சிறுகதைகளையும் மலையாளச் சிறுகதைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். ஒப்பிலக்கிய வகைப்பாட்டில், சிறுகதைகளின் கருப்பொருள் துவங்கி உத்திகள் வரையிலான பல்வேறு நிலையிலும் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. இருத்தலியம், இணைநிலை ஆய்வு, பெண்ணிய சிந்தனைகள் என்ற கோணங்களில் இரு மொழிகளுக்கான சிறுகதைகளும் நோக்கப்பட்டுள்ளன. இருமொழிப் புலமையைத் தெளிவுறக் காட்டுகிறது. தமிழ்மொழியிலிருந்து பிரிந்து சென்ற, மலையாள மொழியின் சிறுகதைகளை அவற்றின் தன்மை மாறாது அறிய விரும்புவோர்க்கு அரிய நுால். – முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்