/ சிறுவர்கள் பகுதி / புன்னகைப் பூக்கள்
புன்னகைப் பூக்கள்
குழந்தை பாடல்கள் வாயிலாக சமூகத்தை படம் பிடித்து காட்டும் நுால். இன்றைய சிறுவர் -– சிறுமியர் நாட்டின் முதுகெலும்பு என்ற கருத்தை வலியுறுத்தி ரசிக்க வைக்கிறது. ஆசிரியர்களை போற்ற, ‘கல்வி சொல்லும் அய்யா நமக்கு கண்ணில் கண்ட தெய்வம்...’ என வலியுறுத்துகிறது. கல்வியின் அவசியத்தை, ‘வற்றாது வளங்காணும் வாழ்வு...’ என்ற பாடல் கூறுகிறது. மரங்கள் வளர்ப்பதை சிறு வயதில் இருந்து துவங்க வலியுறுத்துகிறது. வறுமையின் தாக்கத்தை, சிறுமி செயல் வாயிலாக எடுத்துரைக்கிறது. கல்வியால் மட்டுமே தகுந்த மதிப்பு கிடைக்கும் என்பதை, ‘விடுப்பு நாட்கள் முடிந்து இப்போ’ என்ற பாடல் புகட்டுகிறது. விளையாட்டு மீதும் ஆர்வம் ஏற்படுத்துகிறது. கருத்துகள் நிறைந்த தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்




