/ கதைகள் / புதுமையான உவமைக் கதைகள்
புதுமையான உவமைக் கதைகள்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 51 குட்டிக் கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு மட்டும் பெரிய அளவில் உள்ளன. பெண் வயது அதிகரிப்பதை எப்பொழுதும் ஒப்புக்கொள்வது இல்லை என்பதை, ‘மிஸ் கால் குலேஷன்’ கதை நகைச்சுவையாக எடுத்து சொல்கிறது. இதுபோல், ‘தள்ளிப் போச்சு’ கதை விஷம சிரிப்பை விவரிக்கிறது. பெண்ணுக்கு, ‘ஹார்ட் அட்டாக்’ வந்ததை சுவாரசியமாக விவரிக்கிறது. குடிபோதையில் கிடந்தவன் பற்றிய கதை சுவாரசியம் தருகிறது. கணவனை வராண்டாவில் படுக்க வைக்க சொல்கிறாள் மனைவி. மது அடிமைகளுக்கு சவுக்கடியாக உள்ளது. ஈபில் டவரை விற்ற கதை சுவையானது. பற்றற்ற பரவச நிலை அடைய சாமியார் சொல்லும் வழி சிந்தனையை துாண்டுகிறது. யோசிக்க வைக்கும் பூங்கொத்து நுால். – சீத்தலைச்சாத்தன்




