/ கட்டுரைகள் / புதுவை நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்
புதுவை நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்
புதுச்சேரி மக்கள் வழக்கில் பேசும் கதை, பழமொழி, வழிபாட்டு முறை, சடங்கு, நம்பிக்கையை உள்ளடக்கிய நாட்டுப்புறவியலை ஆய்ந்துள்ள நுால். புதுவையில் பின்பற்றப்பட்ட மரபு, பண்பாட்டுக் கூறுகள், வாழ்க்கை விழுமியங்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள், விடுகதைகள், பழங்கதைகள், கதைகள், சடங்குகள், விழாக்கள், அறியாமையால் பின்பற்றப்பட்ட மூட பழக்கங்களை குறிப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.வழிபாடுகள், விழாக்கள், நம்பிக்கைகள், மருத்துவ முறைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. புழங்கும் பொருட்கள் தொன்மை நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளன. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு