/ வாழ்க்கை வரலாறு / இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்

₹ 100

இங்கிலாந்து ராணியாக பதவி வகித்து சமீபத்தில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் பற்றிய விபரங்களைத் தரும் நுால். பிறப்பு முதல் இறப்பு வரை தகவல்களைக் கொண்டுள்ளது. அரச குடும்பம் பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன.இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம், சொத்துக்கள், அதன் மதிப்பு, ராணியின் பயணங்கள், செயல்பாடுகள் மற்றும் தொடர்புகள் குறித்த விபரங்கள் எல்லாம் தரப்பட்டுள்ளன. குழந்தைப் பருவம் முதல் முக்கிய நிகழ்வுகளில் ராணி பங்கேற்ற போட்டோக்களும் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் ராணிக்கு இருந்த அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இங்கிலாந்து அரச குடும்பம் அதன் முக்கியத்துவம், ஆளுகை குறித்த தகவல்களை தருகிறது. உலகின் மிகப் பெரிய குடும்பம் பற்றி அறிய உதவும் நுால்.– மதி


முக்கிய வீடியோ