/ வாழ்க்கை வரலாறு / ரவீந்திரநாத் தாகூரும் அவரது படைப்புகளும்
ரவீந்திரநாத் தாகூரும் அவரது படைப்புகளும்
நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்யும் நுால்.முதல் பகுதியில் தாகூரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் எழுதிய சிறந்த சிறுகதைகளின் மொழியாக்கம் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் சுவையான அனுபவத்தை தருகின்றன. இதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட, 21 கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.இறுதியாக, பல காலக்கட்டங்களில் பல இடங்களில் வேறுபட்ட நிலைகளில் தாகூர் வழங்கிய உரைகளில் இருந்து நினைவில் நிற்கும் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. உள்ளத்தில் உண்மையை தேடினால், விரும்பும் அனைத்தும் தானாக வெளிப்படும் என்பது போல் சிந்தனையை தீட்டுகின்றன. தாகூர் பற்றிய அறிமுக நுால்.– மதி