/ வாழ்க்கை வரலாறு / ராஜ பாட்டை அல்ல முள்ளில் ரோஜா
ராஜ பாட்டை அல்ல முள்ளில் ரோஜா
கல்லுாரியில் துணை முதல்வராக பணியாற்றியவர் வாழ்வில் நிகழ்ந்த போராட்டங்களும், ஆற்றிய பணிகளும் அனுபவமாக உடைய நுால்.பள்ளி கால நிகழ்வு தனித்துவமாக, ‘மிதிவண்டியின் பின் சீட்டில் உட்கார்ந்தால் மூன்று ரூபாய்; மிதித்து சென்றால் இரண்டு ரூபாய்’ என வாடகை வசூலில் இருந்த முரணை நினைவாக பகிர்கிறது. கல்லுாரி பணியில் மாணவர் நலனில் உறுதியான செயல்பாடு உரைக்கப்பட்டுள்ளது.அறிவொளி இயக்க பணிகள் ஆற்றியது, அறிவியல் மாநாடு, தரிசு நில மேம்பாடு திட்டம் போன்ற இயக்கங்கள் முன்னெடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை பாடமாக அமைந்துள்ள சுயசரிதை நுால்.– புலவர் சு.மதியழகன்