/ அரசியல் / ராஜாஜியின் கருத்துக்கள்

₹ 70

23,தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை -17.(பக்கம்: 176) தெளிவு மிக்க கருத்துக்களுக்கு சொந்தக்காரர் ராஜாஜி. அவர் எழுத்துக்கள் மிகவும் கூரானவை. இந்திய நாட்டு வளத்திற்கு பாடுபட்ட அவர், ஊழலை அடியோடு எதிர்த்தவர். அவர் மறைந்த பின்னும் அவர் எழுத்துக்கள் இன்னமும் உயிர்த்துடிப்பு கொண்டவை. பிரதமராக இருந்த இந்திரா அணியை, பெருந்தலைவர் காமராஜர் ஆதரிக்கவில்லை. அப்படியானால், இந்திரா பின்பற்றிய சோஷலிசத்திற்கு காமராஜர் எதிரி என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரம்மானந்த ரெட்டி தெரிவித்தார். இது குறித்து ராஜாஜி தெரிவித்த கருத்து இதோ :""மக்களிடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பது தான் சோஷலிச லட்சியம். இதை வெற்று வார்த்தையால் சாதிக்க முடியாது. ஜனநாயகத்தின் உயர்ந்த நிதியாகிய சுதந்திரத்தைப் பறிக்காமலே, இதைச் செய்ய வேண்டும். சுதந்திரத்தைப் பறிப்பது சோஷலிசம் அல்ல. அது கம்யூனிசமே. இந்த வித்தியாசத்தை காமராஜ் அறிவார். அதனால் தான் அவர் இந்திரா காந்தியின் தரப்பில் இல்லை... (பக்கம் 61)இப்படிப் பல தெளிவான கருத்துக்களை அறிய விரும்புவோர் இந்த நூலைப் படித்துப் பயனடையலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை