/ கதைகள் / ராவணன் காதல்
ராவணன் காதல்
ராமாயண கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், பிரபல எழுத்தாளர்கள் படைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தஞ்சை பிரகாஷ் உட்பட, 17 பேரின் படைப்புகள் உள்ளன. ராமாயணம் சார்ந்த பிரதிகளில் கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை குறித்த ஆய்வு விபரம் சுருக்கமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புனைவுகள் உச்சக்கட்டமாக பன்முகத்தன்மையுடன் திகழ்வதை எடுத்து கூறுகிறது. ராமாயண கதாபாத்திரங்கள், தற்கால சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை முன்வைக்கும் விவாத கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதிகாச கருத்துகளை மையமாக்கி உருவாக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நுால். – ஒளி




