/ கட்டுரைகள் / ரிலாக்ஸ் காமயோகம் பயிலுவோம்
ரிலாக்ஸ் காமயோகம் பயிலுவோம்
உடல் அமைதிக்கான பயிற்சி முறைகள் குறித்த கட்டுரை நுால். காமம் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; சற்று சறுக்கினாலும் ஆபாச வாசலுக்கு சென்று விடும் என்ற எச்சரிக்கையுடன் காமயோகம் குறித்தான கருத்துகள் அறிவியல் ரீதியாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. காமம் ஆண், பெண் உறவு, உடலின் தேவை உணர்வுகளின் வடிகாலாக எப்படி செயல்படுவதை அறிவியல் முறையில் வழிகாட்டுகிறது. ஆன்மிக ரீதியாக அர்த்தநாரீஸ்வர ரூபத்தையும், உமையொருபாகன் வடிவம் உணர்த்தும் கருத்துகளையும் காட்டுகிறது. உடலின் அங்கங்களை ஆசனங்கள் எவ்வாறு அழகுபடுத்துகிறது என்பது குறித்தும் விளக்கு கிறது. காமயோகம் பயிலுவோம் என சொல்லி தருவதோடு, மனதை ரிலாக்ஸ் செய்யவும் கற்பிக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு




