/ இலக்கியம் / சாணக்கியரும் சந்திரகுப்தனும்

₹ 195

பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014. (பக்கம்: 538) மூன்றாம் பதிப்பாக வெளிவரும் இந்நாவல் கிரேக்கர், பாரசீகர், பினீஷியர், யூதர், எகிப்தியர், ஆதி இந்தியர்களின் தொடக்க கால சரித்திர நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மாபெரும் பேரரசை நிறுவி பின் முடிதுறந்து, சிரவண வலியகுளம் சென்று சல்லேகனம் செய்து மறைந்த சந்திரகுப்தனின் வரலாறும், சந்திர குப்தனுக்கும் அதன்பின் அவர் மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக 13 ஆண்டு இருந்தைக் கூறுகிறது .முடிவில், "ராம நாம ஜபத்தால் என்ன பலன்?, "மாயையை வெல்வது எப்படி? என்றெல்லாம் நாரதரிடம் விளக்கம் பெற்று, "ஜடப் பொருள்களிலும் ஆண்டவன் இருக்கிறான். அவன் சத்து, அசத்து ஆகிய இரண்டும் ஆவான் என்ற தெளிவோடு "ராம, ராம என்று ஜபித்துக் கொண்டே அமரத்துவம் பெற்ற சாணக்கியர் வரலாறும், அழகிய நடையில் வரலாற்றுப் பின்னணியில் புனையப் பெற்றுள்ளது. சாஞ்சி ஸ்தூபியில், சந்திரகுப்தன் கையில் வைத்திருக்கும் சத்தர்ம புண்டரீகமும் (நல்வறம் என்னும் தாமரை) செலூகஸ் ஏந்தியிருக்கும் திராட்சைக் கொத்தும் (இன்ப வாழ்வெனும் மதுவை உண்பது) இருவீரரும் கற்பனைச் சிங்கங்களின் மேல் அமர்ந்திருப்பது இந்தியாவின் பெருமைக்குச் சான்றென குறிப்பிடும் ஆசிரியரின் முகவுரையே ஒரு வரலாற்று ஆய்வு.வரலாற்றுப் புதினங்களை எழுதுபவர்கள் இந்நூலாசிரியர் எடுத்துக் கொண்டுள்ள நடைமுறைகளையும், எழுத்தாற்றலையும், கற்பனையோடு கலந்து ஆன்மிகக் கருத்துப் பரவல்களை வெளியிடும் உத்தியினையும் அறிய வேண்டும். நாவல் வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நல்ல வரலாற்று நாவல்களில் இதுவும் ஒன்று.


சமீபத்திய செய்தி