/ ஆன்மிகம் / சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்

₹ 155

நோய்களைத் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றி குறிப்பிடும் நுால். எந்த தெய்வத்தை வழிபட்டால் எத்தகைய நோய் நீங்கும் என்று கூறுகிறது. திருமந்திரத்தில் திருமூலரின், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற வாக்குக்கு விளக்கம் கூறியுள்ளது. நலமுடன் வாழ இறை அருள் தேவைப்படுகிறது. அதற்கு மந்திரம், ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும். அதனால் நோய் நீங்கும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உள்ள பலன்களை வரிசைப் படுத்தியுள்ளது. வறுமை, நோய் நீங்க சுப்பிரமணியக் கடவுளை வழிபட வேண்டும் என்கிறது. அதற்குரிய மந்திரத்தை விளக்கியுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை