/ வாழ்க்கை வரலாறு / சமூகப் புரட்சியில் அய்யா வைகுண்டர்
சமூகப் புரட்சியில் அய்யா வைகுண்டர்
சமூக கொடுமைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மூட நம்பிக்கைக்கு எதிராக கிளர்ச்சி செய்து அய்யா வைகுண்டர் பெற்ற வெற்றி வரலாறை காட்டும் நுால்.முத்துக்குட்டி என்ற பெயரில் கடலில் மூழ்கி, வைகுண்டராய் எழுந்து, தவம் செய்து ஞானம் பெற்றதை விளக்குகிறது. அவரே கலியுக அவதாரம், முடிசூடும் பெருமாளாக இருந்தார். அன்றைய சாதி அடக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டை பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. தர்மபதிகள், தலைப்பாகை, வள்ளலாரும் வைகுண்டரும் போன்ற தலைப்புகளில் அவதார மகிமையை பதிய வைக்கிறது. சாதியின் பெயரால் நடந்த சீரழிவுகளை தடுத்து விடுதலையும், உயர்வும் தந்த சமுதாயப் புரட்சியைக் கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்