/ வாழ்க்கை வரலாறு / சான்றோர்கள் புகழ் மாலையில் நீதியரசர் ஏ.ஆர்.எல்.,

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றிய தொகுப்பு நுால். அரசு வழக்கறிஞராகவும், நான்கு மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இந்திய சட்ட ஆணையத் தலைவராகவும், முல்லைப் பெரியார் அணை விவகார குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாகவும் பதவி வகித்தவர். பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர். ஆன்மிகம், இசை, இலக்கியம், கல்வி, சட்டம், சமூகம் என்று அனைத்து பிரிவுகளிலும் ஆற்றிய உரைகள் கருத்து பெட்டகமாக உள்ளன. அவரது வாழ்க்கை நிகழ்வுகளும், வழக்கின் நிலைகளும் அரிய செய்திகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை