/ இலக்கியம் / சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்
சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்
சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அகழாய்வுகள், ஆழிப்பேரலைகளால் புலம் பெயர்வுகள், வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்காட்டுகிறது. சிந்து சமவெளி, மொஹஞ்சதாரோ, -ஹரப்பாவில் கிடைத்த எழுத்து வடிவங்கள் பற்றியும் அலசுகிறது. சங்க கால அகத்திணை மரபுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகையில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள், தொன்மங்கள், நாடகப் பண்பை விளக்குகிறது. சங்க கால வாழ்வையும், வரலாற்றையும், இலக்கியச் செழுமையையும் வெளிப்படுத்தும் கருவூலம்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு