/ இலக்கியம் / சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு

₹ 95

சங்க கால வரையறை, முச்சங்கங்களிலும் வீற்றிருந்த புலவர்கள், சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட நுால்களை சுருக்கமாகக் கூறி, பத்துப்பாட்டு இலக்கியங்களை விரித்துரைக்கும் நுால். இந்த நுால்களில் அமைந்த பாவகைகள், பண்பு மிக்க அரசர்கள் அரவணைப்பில் அறநெறி பிறழாத உள்ளமும், நெஞ்சுரமும் கொண்ட சங்க காலப் புலவர்களின் மாண்புகள் சுட்டப்பட்டுள்ளன. ஆற்றுப்படை நுால்களில் பாட்டுடைத் தலைவன், ஆற்றுப்படுத்தப்படுவோர் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பாடல்களின் திரண்ட பொருளுரை, விளக்க உரை, வரலாற்று குறிப்புகள் திணை, துறை பற்றிய விளக்கம், உள்ளுறை உவமம், காவிரி ஆற்றின் சிறப்பு, அட்டிற்சாலை, ஆவண வீதி, வாணிகம், செல்வச் சிறப்பு, தமிழர் பண்பாடு, வான நுால் அறிவு போன்றன விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை