/ இலக்கியம் / சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

₹ 110

மன்னரிடமோ, வள்ளல்களிலிடமோ பரிசில் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான இரவலர்கள் தம்மைப்போன்ற இரவலர் பசியாலும், வறுமையாலும் துன்புற்ற நிலையில் வழியில் எதிர்ப்படும்போது, தான் பரிசிலாகப்பெற்ற பெருவளத்தைக் கூறி அவர்களையும் அப்புரவலரிடத்துச் சென்று பரிசில் பெறுமாறு வழிகாட்டுதலே ஆற்றுப்படை இலக்கணம்.ஆற்றுப்படுத்தப் பெற்றவர் பெயராலேயே ஆற்றுப்படை இலக்கியங்கள் எல்லாம் அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத் தலைவன் முருகன் பெயரால் அமைந்தமை ஏன்? இவ்வினா தொடங்கி, கடற்கடம்பர் கடற்கொள்ளையரா? ஜல்லிக்கட்டின் அறியப்படாத தொல்வரலாறு, பழந்தமிழில் எண்கள் உருவான வரலாறு, பழந்தமிழ்ப் பெண்டிரின் போர்க்களச்செயற்பாடுகள் போன்ற, 10 தலைப்புகளில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எற்பாடு- எல்+பாடு கதிரவன் சாயும் நேரம் எனும் கருத்தை மறுத்து எற்பாடு வைகறைப் பொழுதே எனச் இலக்கியச் சான்றுகள் காட்டி நிறுவியுள்ளார்.நூலாசிரியர், செவ்வியல் இலக்கியப் பணிக்காக இளம் அறிஞர் விருது குடியரசுத் தலைவரிடம் (2009–10) பெற்றவர். பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்ற திறனாளர். சங்க இலக்கியங்களில் ஆழிப்பேரலை என்னும் கடற்கோள் பற்றிய செய்திகள் நூலில் தரப்பட்டுள்ளன. புறநானூற்றில் இடம்பெற்ற, ‘அன்னச் சேவல், அன்னச்சேவல்’ எனும் பாட்டு தூதுச் செய்யுளா எனும் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆர்வலர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுடைய நூல்.கவிக்கோ ஞானச்செல்வன்


முக்கிய வீடியோ