/ வாழ்க்கை வரலாறு / சங்கமும் குறளும் கூறும் வாழ்வியல்
சங்கமும் குறளும் கூறும் வாழ்வியல்
திருக்குறள், சங்க இலக்கியங்கள், காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு பண்டை கால வாழ்க்கையை ஆய்வு செய்துள்ள நுால். அகப்பாடல், புறப்பாடல்களில் வெளிப்படும் தமிழரின் பண்பாட்டை உள்ளடக்கி எழுதப்பட்ட கட்டுரைகளில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சங்க பெண்பாற்புலவர் வெள்ளிவீதியார் அகப்பாடல்களில் அமைந்த ஐந்திணைக் காட்சிகள் விரித்துரைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு திணைகளில் அமைந்த பாடல்களில் நயங்களை நுட்பமாக விளக்கிக் காட்டுகிறது. சங்கப்பாடல்களில் மலர்கள் பெற்றுள்ள சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளது. குறிஞ்சிப் பாடல்களில் காணப்படும் இயற்கையழகு சிறப்புற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு