/ கதைகள் / சரளா என் வளர்ப்பு மகள் தான்!
சரளா என் வளர்ப்பு மகள் தான்!
இரண்டு பொழுதுபோக்கு குறுநாவல்கள் உள்ள புத்தகம். வங்கி அதிகாரியாகி பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர், இரண்டு நாவல்களிலும் வங்கி அலுவலர்களை கதையின் நாயகர் ஆக்கியுள்ளார். குடும்பங்களில் அன்னியோன்யம் குறைய காரணம்,தாம்பத்திய ஈடுபாடு ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்பது பற்றி பேசுகிறது. கணவன் – மனைவி இடையே விருப்பு, வெறுப்புகள் ஒத்துப்போகாத நிலையில்தான் குடும்பத்தில் குழப்பங்கள் தலைதுாக்குகின்றன. இந்த உண்மைகளை அடிப்படையாக வைத்து கதைகள் நகர்த்தப்பட்டுள்ளன. சிறு வயதில் வளர்த்த பெண், முதுமையில் காப்பாற்றும் விசுவாசம் மிகவும் போற்றப்படக் கூடிய ஒன்று. குடும்பப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.– சீத்தலைச் சாத்தன்