/ ஆன்மிகம் / சர்வசக்தி பெற அருமையான ஆலோசனைகள்
சர்வசக்தி பெற அருமையான ஆலோசனைகள்
மனித பிறவியின் பெருமையை உரைக்கும் நுால். சூரிய வெப்பத்தின் முக்கால் பங்கை மேல்நோக்கியும், கால் பங்கை கீழ்நோக்கியும் அனுப்புவதாக கூறுகிறது. சூரிய கிரகணங்கள் நோய்களை குணப்படுத்துவதாக தெரிவிக்கிறது. வேதத்தில் கூறப்படும் கருத்து, நவீன விஞ்ஞானத்துக்கு முரணாக இல்லை என்கிறது. ரத சப்தமி பற்றி விவரிக்கிறது. சூரிய பகவானுக்கு வழங்கப்படும் பெயர் பட்டியலும் உள்ளது. தேவர்களும் அறியாத மெய்ப்பொருள் பற்றியுள்ளது. ஜீவன் சிவனாக இருப்பதை உணர வைக்கிறது. யுகங்கள் பற்றிய செய்திகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அட்டமா சித்திகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. சன்மார்க்க செய்திகளை தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




