/ கட்டுரைகள் / சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

₹ 260

பக்கம்: 416 ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி.ஞானையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய - கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ - ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய புரிந்துணர்வில், ஒரு வித்தியாசமான சிந்தனையை கொண்டிருக்கிறார் என்பதை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்.ஒபாமாவின் ஆட்சிக் கால பயங்கரவாதம் பற்றிய தகவல்களில், மென்மைப் போக்கை அதிகம் கையாள்வதைப் பார்க்க முடிகிறது.காரணம் உளுத்து வரும் பொதுவுடமை தத்துவங்களை விளக்குவதில், ஆர்வம் காட்டுகிறார். புத்தகத்தில் பயங்கரவாதத்தைப் பற்றி பல்வேறு பரிமாணங்களில் செய்திகளும், சமூக மீடியாக்களில் கருத்துக்களும் வரும் நேரத்தில், பழைய பாதையில் பயங்கரவாதத்தை விவரித்திருப்பது சற்று நெருடலாக உள்ளது.தகவல்களைச் சேகரித்து, தனது நூலுக்கு ஏற்புடையது என்று கருதியவற்றை, நன்கு கோர்வைப்படுத்தி எழுதியுள்ளார். ஆனால், அவற்றுள் பல சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை, ஏனெனில், பயங்கரவாதம் பற்றிய பரிமாணம் நாளுக்கு நாள் விரிந்து வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை