/ கட்டுரைகள் / சதாபிஷேக சான்னித்யம் ப்ளஸ்

₹ 150

சதாபிஷேகம் குறித்த செய்திகளை கூறும் நுால். ஆயிரம் பிறை கண்டோர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என ரிஷிகள் அருளியிருப்பதை எடுத்துரைக்கிறது. 80 ஆண்டுகளில், 1,000 பிறை களுக்கான கணக்கீடும் உள்ளது. முதல் வயது நிறைவுற்றதும் ஆயுஷ்ய ஹோமம், 60வது ஆண்டில் சஷ்டியப்த பூர்த்தி, 70ம் ஆண்டு துவக்கத்தில் பீமரத சாந்தி என வரிசையாக கூறப்பட்டுள்ளது. இவை எல்லாம் பரிகார பூஜைகள். சதாபிஷேகம் பரிகார கர்மா இல்லை; சதாபிஷேக நிறைவு என குறிப்பிட்டிருக்கிறது. இறையருளால் நடந்த அற்புத நிகழ்வுகளும் சுட்டப்பட்டுள்ளன. சதாபிஷேகம் பற்றி விளக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்