/ உளவியல் / சாதி உணர்வுகளை மறுப்போம், மறப்போம்

₹ 70

ஜாதி உணர்வால் ஏற்படும் து ன் பங்களையும், பாதிப்புகளையும் விளக்கும் நுால். மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஜாதி கொடுமையால் ஏற்படும் மோதல், கொலை வரை சென்று விடுவதை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. ஜாதி மறுப்பை சித்தர் பாடல் வழியாக போதிக்கிறது. இயற்கை தத்துவ வழியில் மனித நேயத்தை வளர்க்க வழிகாட்டுகிறது. அய்யா வைகுண்டர், ராமானுஜர் ஜாதி உணர்வுகளை போக்கிய வழிமுறைகளை பல தலைப்புகளில் விவரிக்கிறது. ஜாதி உணர்வு மேலோங்குவதால் ஏற்படும் விளைவு களை அலசுகிறது. அதனால் அராஜகம், அதர்மத்திற்கு வழி ஏற்படும் என சாடுகிறது. அரிச்சந்திரனிடம் தோற்ற விசுவாமித்திரர் வரலாறும் கூறப்பட்டுள்ளது. ஜாதியற்ற சமுதாயம் அமைக்க வழிகாட்டும் நுால். – புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி