/ பெண்கள் / சாவித்ரிபாய் புலே
சாவித்ரிபாய் புலே
பெண் கல்வியின் இன்றியமையாமையை எடுத்து கூறும் நுால். சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரிபாய் புலே கல்வியை பரப்புவதில் செய்த சாதனைகளை பட்டியலிடுகிறது. அதற்காக பட்ட துன்பங்களை வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையுடன் செயல்பட்டதை அறிய தருகிறது. பெண் படிக்கக் கூடாது என்ற அடக்கு முறை நிலவிய காலத்தில் பிறந்த சாவித்ரிபாய், சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை எடுத்துக் கூறுகிறது. அவரது வாழ்க்கை சம்பவங்களுடன், கல்வியை பரப்பிய பணியையும், சூழலை சமாளித்த விதத்தையும் விவரிக்கிறது. பின்தங்கிய சமூகத்தில் பிறந்து, துணிச்சலான செயல்பாட்டால் பெண் கல்வியில் புரட்சி ஏற்படுத்தியதை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் ஆசிரியர் என பெருமையுடன் உயர்ந்ததை, எளிய நடையில் கதை போல் விவரிக்கும் நுால். – மதி