/ கதைகள் / சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்
சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்
ஐம்பெரும் காப்பியமான சீவக சிந்தாமணியை சுருக்கி, கற்பனை பாத்திரங்கள் பொருத்தி, திரைப்படத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நுால். கதாபாத்திர பட்டியலோடு துவங்குகிறது. வசனங்கள் நேர்த்தியாக உள்ளன. நவரசங்களையும் நயமுற கண்டு களிக்க வகை செய்கிறது. கட்டியங்காரன் கதாபாத்திரம் துடுக்கும், மிடுக்குமாக உற்சாகம் கொடுக்கும். நயவஞ்சகம், சூது, கயமைத்தனம், பார்க்கும் பெண்கள் மீது வேட்கை, அதிகாரப் போக்கு என அபாரமாய் உள்ளது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நாடக நுால்.– டாக்டர் கார்முகிலோன்