/ கட்டுரைகள் / செய்குதம்பிப் பாவலர் வாழ்வோவியம்
செய்குதம்பிப் பாவலர் வாழ்வோவியம்
சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் ஆளுமைகளை விரிவாக எடுத்துரைக்கும் நுால். காந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். வள்ளலாரின் பாடலுக்கு ஆழமான கருத்துக்களை முன்வைத்து பெருமை தேடித்தந்துள்ளார். இவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 100 செயல்களை ஆற்றும் திறன் முக்கி அவதானக்கலையில் புகழ் பெற்றதால், மக்கள் மனதில் இடம்பெற்றவர். திருக்குறள், கம்பராமாயணத்தை நன்கறிந்து சொற்பொழிவு ஆற்றியவர்.இவரது பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறை அறியவேண்டும் என அழுத்தமாக சொல்கிறது. தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையான தகவல்களுடன் தந்துள்ள நுால். – ராம.குருநாதன்