/ கட்டுரைகள் / தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் துளிப்பாக்(ஐக்கூ) கட்டுரைகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் துளிப்பாக்(ஐக்கூ) கட்டுரைகள்
ஐக்கூ என்ற கவிதையின் பரிமாணத்தை விளக்கும் நுால். திறனாய்வு-, மதிப்பீடு என்ற கோணத்தில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. ஐக்கூ என்பது பொருள் ஆழம் மிக்க ஜப்பானிய கவிதை. உலகெங்கிலும் பரவலாகி கவிஞர்களை ஈர்த்துள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தியாக பயன்பட்டது ஜென் மதத்தின் அடிநாதமாக உள்ளது. தமிழகத்தில் பாரதியால் அறிமுகமாகி அசுர வளர்ச்சியில் உள்ளது. ஐக்கூ கவிதை எப்படி இருக்கும், அதை எவ்வாறு எழுதுவது, அதன் இயல்புகள், கூறும் முறை பற்றி விளக்கமாக தகவல்கள் உள்ளன. அவை சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஐக்கூ கவிஞர்களுக்கு பயனளிக்கும் வகையிலான தொகுப்பு நுால். – ராம.குருநாதன்