/ இலக்கியம் / செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்
செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்
பக்கம்: 190 நல்ல கட்டுரைத் தொகுப்பு நூல். பாரதியின் பார்வையில் பிரபஞ்சம் எனத் துவங்கி, ஆண்டாள் பாசுரங்களில் அகப்பொருள் கூறுகள் என, 11 தலைப்புகளோடு நூல் நிறைவடைகிறது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்கள், திருமந்திரம், திருவாசகம், ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்கள், புறப்பாடல்கள் என, சங்க காலம் முதல் எட்டயபுரத்து கவிதை மண் வாசனை வரை நாம் உணர்ந்து, அறிந்து, மகிழ்ந்து பெருமை கொள்ளத்தக்க வகையில், 2000 ஆண்டு கால பண்பாட்டுக் கூறுகளை நல்ல தமிழில் தந்துள்ளார் முனைவர் க.முருகேசன்.நல்ல கட்டமைப்பு. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை ஒரு முறையாவது படிக்க வேண்டிய இலக்கிய ஆய்வுக் கோவை.