/ இலக்கியம் / செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்

₹ 320

பழந்தமிழ் இலக்கியத்தை, சித்தர் வாக்குடன் இணைத்து ஒப்புமை நோக்கில் படைக்கப் பட்டுள்ள ஆய்வு நுால். தகவல்கள் உரிய ஆதாரங்களுடன் சொல்லப் பட்டிருக்கின்றன. சித்தர்கள் காலவாரியாக தந்த மெய்யியல் கொடையை, சங்க இலக்கியம் காலந்தோறும் ஏற்படுத்திய செல்வாக்கை மதிப்பிடுகிறது. படைப்புகளின் உள்ளடக்கத்தையும், மெய்யிலையும், வடிவ, உத்தி செல்வாக்கையும் தெளிவுற விளக்குகிறது. ஒவ்வொன்றும் ஒப்பீடு, விளக்க முறையில் காட்டப்பட்டுள்ளது. திருக்குறள் துவங்கி பாடல்களை சுட்டிக்காட்டி, பொருள் வகுத்து சொல்வது புலமையை காட்டுகிறது. செவ்விலக்கியம், சித்தர் பாடல்களில் உவமையணியாக இடம் பெற்ற கருத்துகள் காட்டும் உண்மையை கூறும் ஆய்வு நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை