/ ஆன்மிகம் / சேயூர் முருகன் திருக்கோயில் தல வரலாறு
சேயூர் முருகன் திருக்கோயில் தல வரலாறு
செய்யூர் முருகன் திருக்கோவில் தல வரலாறு கூறும் நுால்.ஊரமைப்பு, ஊர் பெயர் காரணம், ஊரில் இருக்கும் கோவில்கள் பற்றி 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட விபரங்களை கூறுகிறது. இதற்கு பின் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி, கட்டுமான விபரங்களை வகைப்படுத்தி உரைக்கிறது.கோவிலில் உள்ள நந்தவனம், யாகசாலை, கல்துாண், நவக்கிரக சன்னிதி, இரட்டைக் கிணறுகள் குறித்து அரிய தகவல்களை தருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி, வைகாசி விசாகம், திருவாதிரை திருவிழாக்களுக்கும் விளக்கம் தரும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து