/ புத்தக மதிப்புரை / செய்யூர் அன்றும் இன்றும்
செய்யூர் அன்றும் இன்றும்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரின் வரலாற்று சிறப்புகளை எடுத்துரைக்கும் நுால். முதலில் இலக்கிய சான்றுகள் அடிப்படையில் செய்யூர் வரலாற்று செய்திகள் தொகுத்து ஆராய்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. கற்பனையை தவிர்த்து, தக்க சான்றுகள் வழியாக செய்திகள் தரப்பட்டுள்ளன. வரலாறு மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் அடிப்படையில் தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. சோழர் கால ஆட்சி முறை, வணிக சிறப்பு, உப்பள தொழிலின் தொன்மை என பல்வேறு சிறப்பு தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்குள்ள சமூக கட்டமைப்பு, பொருளாதார ரீதியிலான மாற்றங்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன. இறுதியாக ஆன்மிக சிறப்பு, வேதாளங்களின் தத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. உள்ளூர் வரலாற்றை முழுமையாக தரும் நுால். – ஒளி




