/ ஆன்மிகம் / ஷண்ணவதி தர்ப்பணம் (முன்னோர் கடன் தீர்த்தல்)
ஷண்ணவதி தர்ப்பணம் (முன்னோர் கடன் தீர்த்தல்)
நித்திய கர்மாவான சந்தியாவந்தனம் முக்கியமாக, காயத்ரி ஜபம் பற்றியும், பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஸ்ராத்தம், தர்ப்பணம் பற்றியும், குலதெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால்.காயத்ரி மந்திரத்தின் தத்துவங்கள், பலன்கள், அறிவியல் பூர்வ அம்சங்கள், முப்புரி நுாலான பூணுால் விளக்கங்கள் பற்றி விபரமாக தரப்பட்டுள்ளது. பெற்றோர், மூதாதையருக்கு செய்யப்படும் தர்ப்பண வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஷண்ணவதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, 96 என்று பொருள். ஓர் ஆண்டில் செய்ய வேண்டிய தர்ப்பணங்கள் பற்றி விளக்கமாக உள்ளது. சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.– புலவர் சு.மதியழகன்