/ தமிழ்மொழி / சீர்மேவும் சேக்கிழார்
சீர்மேவும் சேக்கிழார்
பக்கம்: 120 இந்த நாளில் அமைதி இழந்து, ஆரவாரம் பெருகி, குறிக்கோள் கெட்டு சுழன்று உழலும் உலக மக்களுக்கு, குறிப்பாகத் தமிழக மக்களுக்கு, நன்னெறிகள் வழியில் நல்லன எல்லாம் கொண்டு, வாழ்வாங்கு வாழ உதவிடும் நூல்களுள் தலையாயது, தெய்வச் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் என்பது, நூலாசிரியர் வலியுறுத்தும் கருத்து.சேக்கிழார் பித்தன் என்று தம்மைக் குறிப்பிடும் நூலாசிரியர், ஒரு மருத்துவர். அதிலும், விலங்கியல் மருத்துவர். அவர் மனத்துள் திருத்தொண்டர் புராணக் கருத்துக்கள் மண்டிக்கிடக்கின்றன. இப்புராணம் பெரிய புராணம் என்று மதிக்கப்படுவதன் காரணத்தை, இந்நூலைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.மாணிக்கவாசகரையும், திலகவதியாரையும் சேர்த்து, அறுபத்துஐவர் நாயன்மார் எனக் கொண்டு, சேக்கிழார் ஏன் எழுதவில்லை என்ற வினாவின் விடையை, நூலிற்கண்டுகொள்க.