/ கதைகள் / சிதறிய சிறுகதைகள்

₹ 130

நினைவில் நிற்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்புடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.தந்தை இறந்த உடன் உடலை கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் அவசரமாக அப்புறப்படுத்த குறியாக இருக்கும் மகளை பற்றிய கதையின் முடிவு, திருப்பத்தின் உச்சகட்டமாக உள்ளது. எளியோரை வாட்டுவதும், வதைப்பதும் வலியோருக்கு இயல்பாக உள்ளது. அதை வெற்றி கொள்ளும் திறனை கச்சிதமாக சொல்கின்றன கதைகள்.கலகலப்பாக உள்ளது ‘கதைப்போமா’ கதை. சிறுமி உள்ளத்தில் ஜீவகாருண்யம் எப்படி இருக்கும் என்பதை, ‘ஆட்டுக்குட்டி’ கதை அழகாக எடுத்துரைக்கிறது. பணத் திமிருடன் உள்ளவனுக்கு பாடம் புகட்டப்பட்டதை, ‘துஷ்டன்’ கதை மிகவும் துல்லியமாக சொல்கிறது. மனதை தொடும் அருமையான கதைகளின் அணிவகுப்பு நுால்.– டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி