/ பெண்கள் / சிகரம் தொடு பெண்ணே

₹ 145

அடிமை தளையில் இருந்து பெண்ணினம் மீண்டு எழுந்து வருவதை விளக்கும் நுால். வாழ்வு குறித்த பார்வையுடன் சாதனை படைத்து வருவது பற்றிய விபரங்களை தருகிறது. சங்க காலம் துவங்கி தமிழகத்தில் சாதனை படைத்து வருவோரை அறிமுகம் செய்கிறது. சாதனைக்கு பின் உள்ள உழைப்பை தெளிவாக எடுத்துரைக்கிறது. தகுதிகளை வளர்த்துக் கொண்டது குறித்த விபரங்களும் உள்ளன. வீடே உலகம் என்றிருந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதன் பின்னணியை அலசுகிறது. புத்தகத்தில், 17 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. தமிழகம் துவங்கி, உலகம் முழுதும் பல துறைகளிலும் சாதித்து வரும் பெண்களின் மன உறுதியையும், செயல்பாடுகளையும் அறிய தருகிறது. போராட்டங்களில் வென்று முன்னேறிய பெண்களின் சாதனையை கதை போல தரும் நுால். – ராம்


புதிய வீடியோ