/ வாழ்க்கை வரலாறு / சிலம்பு களஞ்சியம் (பகுதி – 2)
சிலம்பு களஞ்சியம் (பகுதி – 2)
சிலப்பதிகார கதைமாந்தர்கள் பற்றிய குறிப்புகளை திரட்டி தரும் நுால். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களை பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய வைக்கின்றன. பிற அரசர்கள் ஆரியப்பேடி, கயவாகு, கனகவிசயர் பற்றியும் உள்ளது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் மூன்று நாடுகளை பற்றிய வரலாற்றுப் பண்பாட்டு தகவல்களை தனித்தனியே விளக்குகிறது. பண்டைக்கால பூம்புகார், மதுரை, வஞ்சி மாநகரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. காப்பியத்தில் சிறு சிறு பங்களிப்புகளில் தோன்றும் காவற்பெண்டு, அரட்டன் செட்டி, அழும்பில் வேல், இளங்கோ வேண்மாள் போன்ற கதைமாந்தர் செய்திகளும் தரப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து உருவாக்கப்பட்ட களஞ்சியம். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு