/ கட்டுரைகள் / சிலம்பு களஞ்சியம் (பகுதி – 4)
சிலம்பு களஞ்சியம் (பகுதி – 4)
சிலப்பதிகாரம் குறிப்பிடும் உயிரினங்கள் பற்றிய நுால். மொத்தம் 192 உயிரினங்களை விளக்கி சொல்கிறது. உயிரினங்களின் பெயர்களுக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பு உள்ளதை விவரிக்கிறது. பகன்றை மலர் இலக்கியங்களில் எடுத்தாளப் பட்டுள்ளதை குறிப்பிட்டு விளக்கம் தருகிறது. தொல்காப்பிய கருத்துப்படி, ‘பாட்டி’ என்ற சொல்லிற்கு, பன்றி, நாய் என பொருள் தருகிறது. மக்கள் எனப்படுவோர் ஐம்பொறி உணர்வு அறிவோடு, மனம் என்பதோர் அறிவும் உடையவர் என கூறுகிறது. மரம், செடி, கொடி, புல் உள்ளிட்டவை தாவரம் என்று விளக்கம் தருகிறது. நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பற்றி சொல்கிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்ட உயிரினங்கள் பற்றி விளக்கம் தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்




