/ ஆன்மிகம் / சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்

₹ 210

வாய்மொழி கதைகளில் கண்ணகி வழிபாடுகளை நுட்பமாக ஆய்ந்துள்ள நுால். தமிழகம், கேரளா, இலங்கை முறைகள் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. சிலப்பதிகாரக் காப்பிய அகக்கட்டுமானம் எடுத்துக் காட்டும் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல கருத்துகளை வரலாற்று நெறியோடு இனவரைவியல் பார்வையை உள்ளடக்கியதாகப் புலப்படுத்துகிறது.கண்ணகிக்கு கோவில் அமைத்து வழிபடும் நாட்டுப்புற வாழ்வு கூறுகளை எடுத்துரைக்கிறது. வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, வைதீகக் கொற்றவை என்ற கட்டமைவுகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சிலம்பில் பல்வகை வழிபாட்டு முறைகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ