/ இலக்கியம் / சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம்
சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம்
தமிழ் மொழியில் படைக்கப்பட்ட காப்பிய நுாலான சிலப்பதிகாரத்தை தழுவிய நாடக நுால், புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. சுவையான தமிழ் நடை, புத்தம் புதிய வரலாற்று நாடகத்தை படித்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மூலக்காப்பியத்தின் கதைப்போக்கில் காலத்துக்கேற்ப மாற்றம் செய்து நம்பகத்தன்மை ஊட்டுகிறது. நேர்த்தியால் நாடகப் பாங்கில் சுவை கூடியிருப்பது தெரிகிறது. காட்சிகள் கண்முன் நடப்பதுபோல் நகர்கின்றன. வர்ணனைகளில் கற்பனை செழுமையோடு உவமைகள் துள்ளுகின்றன. புதிதாக சிலப்பதிகார கதையை புத்துணர்ச்சியோடு படித்த அனுபவம் மனதில் மிதக்கிறது. நீளமான வரலாற்று கதையை சுருக்கமான மேடை நாடகமாக தந்துள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு