/ கட்டுரைகள் / சின்னஞ்சிறு சப்தங்கள்

₹ 150

கவிதை தொகுப்புகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பதினோரு கவிதை தொகுப்புகளை ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்தவை, முதல் மொழிபெயர்ப்பு, நினைவில் மறைந்து போன தொகுதிகள் என பலதரப்பட்ட வகையில் கட்டுரைகள் உள்ளன.‘வெட்ட ஓங்கிய கிளையில் அந்தப் பூ அழகாகச் சிரித்தது’ என்ற கவிதையை உள்ளடக்கிய பெரிய நிலக்கரித் துண்டு தொகுப்பு பேசும் நவீன அரசியல் மீதான எதிர்வினைகளை காட்டுகிறது. உனக்குள் தேடும் போது புத்தரை அடைய முடியும் என விவரிக்கும் குளிர்மலை தொகுப்பும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது. கொரிய, ஆப்ரிக்க தொகுப்புகளை ஆராய்ந்து பேசுபொருள் பற்றி தெரிவிக்கிறது. கவிதைகள் குறித்து தனித்த பார்வையை முன் வைக்கும் நுால்.– ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ