/ கட்டுரைகள் / சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!
மனதை செம்மைப்படுத்த துணை செய்யும் நுால். அறம் என்று துவங்கி, அரசனை நம்பி புருசனை கைவிடுதல் என முடியும், 36 கட்டுரைகளின் தொகுப்பு.கடையேழு வள்ளல்கள் செய்தவை, வள்ளலார் அறம் போன்றவற்றை விளக்குகிறது. ஐம்பெரும் காப்பியங்களில் உள்ளவற்றையும் தெரிவிக்கிறது. வள்ளுவர் துவங்கி, தாயுமானவர் வரை விளக்கம் தரப்பட்டுள்ளது.உழைப்பு தான் வாழ்வை உயர்த்தும். எடுத்த காரியம் வெற்றி பெற ஊக்கம் தேவை என்கிறது. அதனால், எங்கு நோக்கினும் வெற்றி என்ற மந்திரத்தைச் சொல்கிறது. நாடு நலம் பெற, மக்கள் முன்னேற பயன் தரும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்