/ அரசியல் / சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்

₹ 50

சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியவற்றின் தொகுப்பு நுால். சிறை அனுபவங்கள் சிந்தனை துளிகளாக மலர்ந்து உள்ளன. முதலாளித்துவம் தீங்கை தரும் என்கிறது. தாய்மொழியை போற்ற வலியுறுத்துகிறது. கற்பனையின் வழியாக கருத்தை அள்ளி வீசும் கடல் அலை போல் விளங்குகிறது. பூனை, நாய் போன்ற உயிரினங்களின் குணங்களுக்கு அருமையான விளக்கம் உள்ளது. பூனையை முன்வைத்து தீய குணம் உடையோர் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. சிந்தனையை துாண்டும் சிறந்த கருத்துகளை உள்ளடக்கிய மாலையாக அமைந்துள்ளது. கருணாநிதியின் புலமையை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசியல்வாதி மற்றும் பேச்சாளர்களுக்கு உதவும் நுால். – -புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி