/ கதைகள் / சிறப்புச் சிறுகதைகளும் வெற்றி தரும் சிந்தனைகளும்
சிறப்புச் சிறுகதைகளும் வெற்றி தரும் சிந்தனைகளும்
சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை சுட்ட கதை வரை, 48 தலைப்புகளில் உள்ளன.நிஜப் பேய், மனித பேய்களை கண்டு நடுங்குகிறது. தாய், தந்தையை கைவிட்டவன் மந்திரம் கற்றாலும் பலிக்காது. பொய்யானவனை பொய் வழியிலே எமதர்மன் வந்து பிடிக்கிறான். நாய் குணமுள்ளவன் நன்றியுடன் கூடவே வருவான். பூனை குணம் உடையவன் இருந்த இடத்திலே இருப்பான்.முட்டாளுக்கு சொல்லும் அறிவுரை முழுதும் வீணாகும் என்பதை, துாக்கணாங்குருவிக் கூட்டை குரங்கு கலைத்த பழங்கதை வழியாகச் சொல்கிறது. சிந்தனையை உயர்த்தும் நீதிகளை கூறும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்